சுலப காய்கறி பால் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு - 3

கேரட் - 1

பச்சை பட்டாணி - 100 கிராம் (1/2 கப்)

பீன்ஸ் - 6

காளி ஃபிளவர் - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

தண்ணீர் கலக்காத பால் - 200 மில்லி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

கார்ன் ஃபிளவர் - 1 தேக்கரண்டி

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

காய்கறிகளையும், வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு, உருகியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும். ஆறியதும், நைசாக அரைக்கவும்.

வாணலியில் மீதி வெண்ணெய் விட்டு, நறுக்கிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

காய்கள் அதிலேயே பாதி வெந்தது போலானதும், அரைத்த மசாலா, பால், கார்ன் ஃபிளார் மாவை 1/2 தம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

தணலை மிதமாக வைத்து அடிக்கடி கிளறி விடவும். நன்கு கொதித்ததும், இறக்கி பரிமாறவும் (தேவைப்பட்டால் கொத்தமல்லி தூவலாம்).

குறிப்புகள்: