சும்மா குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

தேங்காய் பால் - 1 கப்

இஞ்சி, பூண்டு - சிறிது

புதினா, உப்பு - தேவையான அளவு

ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை, எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.

எண்ணெயில் புதினா, ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை தாளித்து, அரைத்த விழுது சேர்க்கவும்.

கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

புதினா தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: