சீஸ் கொண்டைக்கடலை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்

மெல்டிங் சீஸ் - 6 துண்டுகள்

கெட்டி சீஸ் - 1/2 கப்

வெங்காயம் - 2

தக்காளி - 3

கறிமசாலா - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

வெண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை:

பட்டை - 4

லவங்கம் - 8

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி - பெரியது

பூண்டு - 15 பல்

தேங்காய் - 1/2 கப்

தக்காளி - 2

முந்திரி - 10

செய்முறை:

கடாயில் வெண்ணெய் விட்டு பட்டை 1, லவங்கம் 2, வெங்காயம், தக்காளி 1 போட்டு நன்றாக வதக்கவும்.

பின் கொண்டைக்கடலைபாதி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றவும்.

பின் கொத்தமல்லித்தூள், மிளகாய் தூள், கறி மசாலா போடவும்.

நன்கு கொதித்த பின் அரைத்த விழுதை போட்டு மறுபடியும் கொதிக்க விடவும்.

பின் பச்சை வாசனை போனதும் கெட்டி சீஸை போடவும்.

பின் காரம் பார்த்து பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின் அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மெல்டிங் சீஸ் போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். சுவையான குருமா தயார்.

குறிப்புகள்: