சிந்தாதி சிக்கன் குருமா
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/2 கிலோ (நடுத்தர துண்டுகள்)
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 7 பல்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
கசகசா - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 10
தேங்காய் துருவல் - 1 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ம்ஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணை - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கரில் எண்ணய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, கீறிய பச்சை மிளகாய் போட்டு, மிளகாய் வெள்ளையாக வரும் வரை வதக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு வதக்கவும்.
இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, கோழி கறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தயிறையும் சேர்த்து, நன்கு வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
கசகசா, முந்திரியை சிறிது வெந்நீரில் ஊரவைத்து, தேங்காயை சேர்த்து அரைத்து, கொதித்துக்கொண்டிருக்கும் குழம்புடன் சேர்க்கவும்.
நன்கு கொதித்தவுடன், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.