சிக்கன் ரிச் குருமா
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 8 பல்
பாதாம் - 8
பிஸ்தா - 8
தயிர் - 1 கப்
சர்க்கரையில்லாத கோவா - 1/2 கப்
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாதாம், பிஸ்தாவை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, நைசாக அரைக்கவும்.
தயிரை 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கிய பின், கோழித்துண்டுகள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
கோவாவை 1 கப் வெந்நீரில் கரைத்து, பாதாம், பிஸ்தா அரைத்த கலவையுடன் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
10 நிமிடம் கொதித்த பின், உப்பு, மிளகு தூள், கலக்கிய தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.
சிக்கன் வெந்தவுடன் க்ரீம், ஏலக்காய் தூள் சேர்த்து, 2 நிமிடம் விட்டு இறக்கி பரிமாறவும்.