சிக்கன் குருமா (2)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 3
தயிர் - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 3
பட்டை, லவங்கம், ஏலம் - தலா ஒன்று
டால்டா - 1 தேக்கரண்டி
தேங்காய் பால் - 1 டம்ளர்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியில் வினிகர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சுத்தம் செய்து ஏழு முறை கழுவவும்.கழுவி தண்ணீரை வடிக்கவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை கிளறவும்.
கிளறி கொத்தமல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி மிளகாய் தூள், உப்பு தூள், மஞ்சள் தூள் போட்டு தீயை சிம்மில் வைத்து வேக விடவும்.
தக்காளி வெந்ததும் சிக்கனை சேர்த்து கிளறி தயிரும் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு கடைசியில் சிறிது
கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.