சிக்கன் குருமா (1)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
தயிர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1
மல்லி இலை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
அரைக்க:
தேங்காய் துருவல் - 3/4 கப்
முந்திரி ஊற வைத்தது - 15
கசகசா - 2 தேக்கரண்டி (தேவையில்லையென்றால் விட்டுவிடலாம்)
தாளிக்க:
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
செய்முறை:
சிக்கனை தயிரில் போட்டு உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்யை காயவைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு, பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நல்ல ப்ரவுன் நிறம் வந்ததும் தக்காளி, மல்லி இலை, புதினா சேர்த்து மேலும் வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் ஊறவைத்த சிக்கனை தயிரோடு போட்டு இதனுடன் சேர்த்து கிளறி மிதமான தீயில் வேக விடவும்.
30 நிமிடத்தில் சிக்கன் வெந்து விடும். அவசரமாக இருந்தால் குக்கரில் 3 விசில் விடவும்.
அதே சமயம் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு மைப்போல் அரைக்கவும். சிக்கன் வெந்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 கொதி வந்ததும் தீயை அணைத்து விட்டு இறக்கி பரிமாறவும்.