சிக்கன் குருமா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 3/4 கிலோ

வெங்காயம் - 4

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 5

கேரட் - 1

பட்டாணி - 1 கப்

எலுமிச்சை பழம் - 1

பட்டை - 1

கிராம்பு - 2

ப்ரிஞ்சி இலை - 1

சோம்பு - 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகு -10

தேங்காய் - ஒரு மூடி

சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனைச் சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காயுடன் மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ப்ரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளியைச் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

அனைத்தும் நன்கு வதங்கியதும் கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் சிக்கன் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு பிரட்டவும்.

பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.

சிக்கன் அரை பதமாக வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து வேகவிடவும்.

சிக்கன் நன்கு வெந்து குருமா பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி, புரோட்டாவிற்கு ஏற்ற சிக்கன் குருமா தயார்.