சன்னா பூரி குருமா
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 3
தக்காளி - 3
பூண்டு - 8 பற்கள்
பச்சை மிளகாய் - 6
கசகசா - 1 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
முந்திரி - 6
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் துருவல் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1
கொண்டைக்கடலை - 200 கிராம்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
இலை - பாதி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
அன்னாசிப் பூ சிறியது - 1
ஏலக்காய் - 1
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும்.
கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை இரண்டையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, முந்திரி, கசகசா, தேங்காய் துருவல், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கசகசாவிற்கு பதிலாக பொட்டுக்கடலை சேர்த்தும் அரைக்கலாம்.
வாணலியில் ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒன்றரை மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, இலை, சோம்பு, அன்னாசிப் பூ, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
அதில் கறிவேப்பிலையை போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு 1/4 தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கி 3 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் மூடியை திறந்து அரைத்த விழுதை சேர்த்து மிக்ஸியில் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஊற்றி மூடி வைக்கவும்.
2 நிமிடம் கழித்து திறந்து அதில் தக்காளியை போட்டு நன்கு கிளறி விடவும்.
பிறகு அதில் வேக வைத்த கொண்டைக்கடலையை தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு கிளறி மூடி வைக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். 6 நிமிடம் கழித்து மூடியை திறந்து மசித்த உருளைக்கிழங்கை போடவும்.
உருளைக்கிழங்கை போட்ட பிறகு கரண்டியால் கிளறி விட்டு மேலே கொத்தமல்லித் தழையை தூவி ஒரு தட்டை வைத்து மூடி விடவும்.
2 நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்கு வாசனை வந்ததும் ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.