சன்னா ஆலு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2

சன்னா - 50 கிராம்

மட்டன் மசாலா தூள் - 3 தேக்கரண்டி

வெங்காயம் - 2

தக்காளி - 3

தேங்காய் - கால் மூடி

வரமிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

செய்முறை:

கால் மூடி தேங்காயை நன்கு விழுதாக அரைத்து வைக்கவும். கடைசியில் 3 தேக்கரண்டி மட்டன் மசாலா தூள் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு வைக்கவும்.

சன்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்து பின்னர் உப்பு சேர்த்து சுண்டலுக்கு போல் அவித்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் பொடியாய் நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

பின்னர் நான்காய் நறுக்கிய உருளைக்கிழங்கு அவித்த சன்னா சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின் தேவைக்கு தண்ணீர் விட்டு மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் கீழே இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது புலாவ் வகைகளுக்கு அருமையாக பொருந்தும்.

கருப்பு கொண்டைகடலையிலும் இதே முறையில் செய்யலாம்.