க்ரீன் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

பீன்ஸ் - 5

தக்காளி - 1

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 4

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

சோம்பு - 1/4 தேக்கரண்டி

கசகசா - 1/4 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

தேங்காய் - கால் மூடி

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பீன்ஸ், மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைபருப்பு தாளிக்கவும்.

அதில் கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும்

பின்பு அதில் பட்டாணி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

குறிப்புகள்:

நெய் தோசையுடன் பரிமாற க்ரீன் குருமா ரெடி.