கோழி வெள்ளை குருமா
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10
தேங்காய் - 1
முந்திரி - 25 கிராம்
கசகசா - 1 தேக்கரண்டி
பட்டை - 1
இலவங்கம் - 1
ஏலக்காய் - 5
மல்லி விதை - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு அங்குலம்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 1
பிரிஞ்சி இலை - சிறிது
ஏலக்காய் - 2
அன்னாசிப்பூ - 2
செய்முறை:
முந்திரி, கசகசா, இஞ்சி, பூண்டு, பட்டை, இலவங்கம், ஏலக்காய், மல்லி ஆகியவற்றை அரைத்துகொள்ளவும். தேங்காயை பாலெடுத்து கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை போட்டு தாளித்தவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி கோழி சேர்த்து பிரட்டவும்.
அரைத்த மசாலா, உப்பு போட்டு இரண்டாவது எடுத்த பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
கோழி நன்கு வெந்தவுடன் முதல் பாலை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.