கோழி மிளகு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்புடன் கோழி - 1/2 கிலோ

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 முழுசு

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு

பட்டை, லவங்கம் - சிறிதளவு

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - 1/4 கப்

முந்திரி - 5

பாதாம் - சுடானா தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்தது 5

தயிர் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

அரைக்க வேண்டிய அனைத்தையும் தண்ணீர் குறைவாக சேர்த்து மைய்ய அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைந்து வரும் போது, கோழி, மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

கோழி வெந்ததும், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: