கோழி குருமா (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 500 கிராம்

வெங்காயம் - 1

தயிர் - 1 கோப்பை

கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி

பாதாம் அல்லது முந்திரி - 10

மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

கசகசா - 2 தேக்கரண்டி

வெள்ளை மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

எலுமிச்சை பழம் - 1

எண்ணெய் + நெய் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முந்திரி, கசகசாவை மையாக அரைத்துக் கொள்ளவும்.

கோழியில் மல்லித்தூள், தயிர், மசாலாத்தூள் போட்டு பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்

ஓரு நாண்ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு லேசாக பொரிக்கவும்.

பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாயை போட்டு பிரட்டி வைத்த கறியை போட்டு நன்கு வேக விடவும்.

தேவையென்றால் சிறிது தண்ணீர் ஊற்றவும் பாதி வெந்ததும் அரைத்த விழுதை போட்டு வற்றவிடவும். கடைசியில் வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு பிழிந்து நெய் சோற்றுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: