கோழி குருமா (1)
தேவையான பொருட்கள்:
கோழி - 200 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பற்கள்
புதினா - கைப்பிடியளவு
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, மிளகு, சீரகம் - தேவைக்கேற்ப
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் - கால் முடி
முந்திரி, தோல் நீக்கிய பாதாம் - தலா 5
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கோழி மசாலா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கோழியைச் சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் கோழி மசாலா சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, மிளகு மற்றும் சீரகம் போட்டுப் பொரியவிடவும்
பொரிந்ததும் புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை ஆறவிட்டு அரைத்து வைக்கவும்.
தேங்காயுடன் கசகசா, முந்திரி, பாதாம், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஊறவைத்த கோழியைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பாதி வெந்ததும், அரைத்த தேங்காய் விழுது, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கி பரிமாறவும்.