கொள்ளு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொள்ளு 50 கிராம்.

வெங்காயம் - மீடீயம் சைஸ் இரண்டு

தக்காளி - 1.

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி.

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சாம்பார் பொடி (வீட்டு மிளகாய் தூள்) - 1 மேசைக்கரண்டி.

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி.

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணை - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இரவே கொள்ளு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து விடவும்.

இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் ஊற்றி கொள்ளை நன்கு கழுவி

குக்கரில் கொள்ளை போட்டு, 200 மிலி தண்ணீர் விட்டு அதில் தேவையான உப்பில் பாதியளவு உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மூன்று சொட்டு எண்ணை விட்டு மூன்று விசில் வரும் வரை வைக்கவும். விசில் வருவதற்குள் மசாலா ரெடி பண்ணிக் கொள்ளவும்.

சீரகத்தை மிக்ஸியில் போட்டு பொடிந்தவுடன்

வெங்காயம் போட்டு அதிலேயே அரைத்துக் கொள்ளவும்.

அதிலேயே தக்காளியை போட்டு ஒரு சுற்று ஓட்டவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்தூளையும் போட்டு மீண்டும் ஒரு சுற்று ஓட்டி

நான்ஸ்டிக் பேனில் இரண்டு மேசைக் கரண்டி எண்ணையை ஊற்றி அது காய்ந்ததும்

மிக்ஸில் அரைத்த மசாலாவை போட்டு, மீதியுள்ள பாதி உப்பையும் போட்டு சுருள வதக்கவும் எண்ணை பிரிந்து வந்ததும்

குக்கரை திறந்து அதில் வதக்கிய மசாலாவை போட்டு மீண்டும் மூடி ஒரு விசில் வரும் வரை வைக்கவும்.

குறிப்புகள்: