கொத்துக்கறி குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி - 1/2 கிலோ

தேங்காய் துருவியது - 1 கப்

சின்ன வெங்காயம் - 1 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிதளவு

சாம்பார் தூள் - 3 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்துக் கறியை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும்.

தேங்காயை சோம்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

நன்கு வதங்கிய பின் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதனுடன் கொத்துக்கறி, மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

வதங்கிய பின்பு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கறியை வேக வைக்கவும்.

கடைசியாக அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்தபின் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: