கொத்தமல்லிதலை குருமா
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - சிறிது
பட்டை - 3
லவங்கம் - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தூள் - 1 தேக்கரண்டி
தனியாக அரைத்து கொள்ளவும்:
தேங்காய் - 1/2 கப்
முந்திரி - 10
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
அரைக்க தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித்தழை - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 12 பல்
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லித் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
பின் (கொத்தமல்லித்தழை, இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய்) அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கிய பின் தண்ணீர் 2 கப் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
அதில் தனியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்.
பின் உப்பு, காரம் சரி பார்க்கவும்.
காரம் போதவில்லை என்றால் மிளகாய் தூள் அல்லது பச்சை மிளகாய் சேர்க்கவும். பின் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.