கொண்டைக்கடலை குருமா
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
அரைத்துக் கொள்ள:
தேங்காய் - நான்கு துண்டு
தக்காளி - 1
முந்திரி - ஏழு
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - சிறியது ஒன்று
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மிளகு, சீரகம் - தலா 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்க வேண்டியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த அரைத்த கலவையை போடவும்.
மிளகாய் பொடி மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் கடலையை போட்டு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
கலவை நன்கு திக்கானதும் கொத்தமல்லி. தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.