கொட்ரா கோழி குருமா
தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
மல்லிதழை - சிறிது
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
அரைத்துக் கொள்ள:
மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
முந்திரி - 10
ஏலக்காய் - 3
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - 1/4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் மல்லி இலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்த கோழியை போட்டு ஒரு முறை பிரட்டிவிட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கிளறவும். உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கோழி பாதி வெந்ததும் அரைத்த கலவையை போட்டு தண்ணீர் சேர்த்து கிளறி வேக விடவும்.
வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.