கேரட் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 3 என்னம்

அரைக்க:

தேங்காய் - 1 பத்தை

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - 1 அங்குலம் அளவு

பூண்டு - 5

தாளிக்க:

எண்ணைய் - 1 தேக்கரண்டி

கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் நறுக்கிய கேரட்டை போட்டு வதக்கவும்.

பின் அரைக்க கொடுக்கவேண்டியவற்றை அரைக்கவும்.

வதக்கிய கேரட்டுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து சாம்பார் தூள் 1 1/2 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

பின் கொதித்ததும் அரைத்த கலவையை ஊற்றி 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி கலந்து மூடி வைத்து 2 நிமிடம் மூடி வேகவைக்கவும்.

பின் குருமா நன்கு கொதித்து வெந்தவுடன் அடுப்பை அணைத்து குருமாவை பரிமாறவும்.

குறிப்புகள்: