குலோப் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குலோப் ஜாமூன் மிக்ஸ் - 100 கிராம்

முந்திரிபருப்பு - 15

தேங்காய்துருவல் - 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி

புதினா இலைகள் - சிறிது

கொத்தமல்லி இலைகள் - சிறிது

பெரிய வெங்காயம் - 2

சிறிய வெங்காயம் - 10

பச்சைமிளகாய் - 7

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையானஅளவு

தாளிக்க:

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பட்டை - 1 சிறிய துண்டு

லவங்கம் - 4

செய்முறை:

முந்திரி பருப்புபை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து விழுதாக அரைக்கவும்.

தேங்காய் துருவலிருது இரண்டு தரமாக பால் எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்,சிறியவெங்காயம்,புதினா இவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

குலோப் ஜாமூன் மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைத்து சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அரைத்த மசாலாவிழுது, உப்பு சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்

தேங்காயில் இருந்து எடுத்த 2-வது பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.

கொதித்ததும் முந்திரிவிழுதை சேர்க்கவும். கெட்டியாகும் போது முதல் பாலை சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும்

பரிமாற சற்று நேரம், முன்பு பொரித்த குலோப்பை குருமாவில் சேர்க்கவும்.

குறிப்புகள்: