குருமா
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1
கேரட் - 1
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 2
கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி, பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
தனியாத்தூள், கரம் மசாலாதூள் சேர்த்துக் கலக்கவும்.
மிளகாய், தேங்காய் துருவலை அரைத்து, இதனுடன் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தேங்காய்க்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.