கும்பகோணம் வெள்ளை குருமா ( சைவம் )
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 300 கிராம்.
நெய் - 25 கிராம்.
எண்ணெய் - 75 கிராம்.
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி.
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
நீளமாக அரிந்த வெங்காயம் - 100 கிராம்
நீளமாக அரிந்த தக்காளி - 50 கிராம்
நீளவாட்டில் வெட்டிய பச்சை மிளகாய் - 10 லிருந்து 15
தயிர் புளித்தது - 100 மில்லி லிட்டர்
எலுமிச்சை (சாறு பிழிந்தது) - 1
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிக்ஸியில் அரைக்க:
ஊற வைத்த கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 20
செய்முறை:
அரைக்க வேண்டிய 4 பொருட்களையும் நீர் ஊற்றி நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
ப்ரஷர் குக்கரில் நெய், எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை போட்டு, வெடித்தவுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
இப்போது இஞ்சி பூண்டு விழுதை கலந்து, வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
இந்த நிலையில் உருளைக்கிழங்கை சேர்த்து, மிதமான சூட்டில் கிளறி விட வேண்டும்.
பச்சைமிளகாய், தக்காளி, தயிர் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
இப்போது தனியா தூள், அரைத்த பேஸ்ட், உப்பு கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து, குக்கரை மூடி விசில் வந்தவுடன் 5 நிமிடம் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், திறந்து, எலுமிச்சைச்சாறு கலந்து, மிதமான சூட்டில் எண்ணெய் மிதந்து வரும் வரை அடுப்பில் வைத்து,
பின்னர் கொத்தமல்லித் தழை தூவி பரிமாற வேண்டும்.