கீரை உருளை மசாலா குருமா
0
தேவையான பொருட்கள்:
வேகவைத்து சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 2
சுத்தம் செய்து பொடிதாக நறுக்கிய பாலக் கீரை - 1 கட்டு
சுத்தம் செய்து பொடிதாக நறுக்கிய அரைக்கீரை - 1 கட்டு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையுடன் பச்சைமிளகாய், தக்காளியுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
ஆறியதும் உப்பு சேர்த்து கடைந்து வைக்கவேண்டும்.
பின் உருளைக்கிழங்கை எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
கீரைக் கலவையில் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் 2 டேபிள் ஸ்பூன் எண்ணையில் சீரகம் , பூண்டை சேர்த்து வதக்கி கலவையில் சேர்த்து கிளறி விடவும். வித்யாசமான சுவையில் கீரை உருளை மசாலா குருமா ரெடி.