காலிஃப்ளவர் பால் குருமா
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 கப் (கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து கொள்ளவும்)
பால் - 1/2 கப்
பனீர் - 1/2 கப் துருவியது அல்லது முழுதாகவும் போடலாம்
இஞ்சி, பூண்டு விழுது - 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
பட்டை - 3
லவங்கம் - 5
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
வெங்காயம் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கறி மசாலா - 1 தேக்கரண்டி
தக்காளி - 3
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
முந்திரி துருவல் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிது.
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் வெண்ணெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பாதி உப்பு மற்றும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து தேவையானால் தண்ணீர் தெளித்து, எண்ணெய் வேண்டும் எனில் சிறிது ஊற்றி நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
பிறகு தண்ணீர் 2 கப் ஊற்றி, காலிஃப்ளவர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
வெந்தபிறகு மிளகு தூள், பால் சேர்க்கவும்.
அதில் தேங்காய் துருவல், முந்திரி துருவல், பனீர், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி.