காலிஃப்ளவர் பட்டாணி குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுமாரான அளவு காலிஃப்ளவர் - 1

வேகவைத்த பட்டாணி - 1 கப்

தக்காளி (சிறிய துண்டுகளாக நறுக்கவும்) - 2

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 6 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்கத் தேவையானவை:

வெங்காயம் - 2

பூண்டு - 6 பல்

இஞ்சி - ஒரு அங்குலம்

முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6

செய்முறை:

பூவை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயைச் சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

பிறகு வெந்த பட்டாணியும், நறுக்கி வைத்துள்ள பூத் துண்டுகளையும் சேர்த்து அத்துடன் சிறிது நீரும் சேர்த்து வேக வைக்கவும்.

விழுது கெட்டியாகி, காயும் நன்கு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: