காலிஃப்ளவர் குருமா (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1

சின்ன வெங்காயம் - 1 கப்

பூண்டு - 2 மேசைக்கரண்டி

தக்காளி - 3

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ளவும்:

துருவிய தேங்காய் - 1 கப்

முந்திரி - 10

கசகசா - 1 தேக்கரண்டி

செய்முறை:

காலி ஃப்ளவரை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிதளவு சோம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்த விழுது, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

பின் மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், உப்பு, வேகவைத்த காலி ஃப்ளவர் போட்டு கிளறி கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

கொத்தமல்லி இலை, சிறிது நெய் விட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: