காலிஃப்ளவர் குருமா (2)
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 8
தேங்காய் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - 50 கிராம்
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
பட்டை, காய் - 1
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
பூண்டு - 7 பல்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
தாளிக்க:
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ - 1
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு, ஏலக்காய், கசகசா, தேங்காய், பொட்டுக்கடலை, 5 பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவேண்டும். வதக்கியவைகளை ஆற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு, வெந்தயம் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி 2 மிளகாய் கீறிப்போட்டு காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி போட்டு கிளறவும்.
அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அரைத்த கலவையை ஊற்றி மேலும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்