காலிஃப்ளவர் குருமா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிப்ளவர் - 1 கப்

உருளை கிழங்கு - 1/4 கப்

பட்டாணி - 1/4 கப்

வெங்காயம் - 1 1/2 கப்

தக்காளி - 1 1/2 கப்

பூண்டு - 3 பல்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய் வற்றல் - 7

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பட்டாணி, காலிப்ளவர், உருளை மூன்றையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். அதனுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுதை ஊற்றி உப்பு சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு கிளறவும்.

இந்த கலவை கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்தவற்றை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: