காய்கறி குருமா (6)
தேவையான பொருட்கள்:
பெரிய அளவு வெங்காயம் - 1
தக்காளி - 2
குடை மிளகாய் - 1
ஃப்ரோசன் பச்சை பட்டாணி - 1 கப்
நறுக்கிய உருளை கிழங்கு - 2 கப்
நறுக்கிய கேரட் - 1 கப்
நறுக்கிய முள்ளங்கி - 1 கப்
நறுக்கிய பீன்ஸ் - 1 கப்
பூண்டு - 1/2 கப்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டை - ஒரு அங்குலத்துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு அங்குலத்துண்டு
கொத்துமல்லி இலை - 1/2 கப்
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
காய்கறிகளை அரிந்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இஞ்சியை, பத்து பல் பூண்டுடன் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வேர்கடலையுடன் புளியை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடி போட்டு, பின் நறுக்கின வெங்காயம், மீதி உள்ள பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்னர் நறுக்கின உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின்னர் தக்காளி, குடைமிளகாய், பட்டாணி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை ஊற்றவும்.
நன்கு கொதி வந்தவுடன் கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
வேர்க்கடலைக்கு பதில் தேங்காய்ப்பால் ஊற்றியும் செய்யலாம்.