காய்கறி குருமா (4)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கேரட் - 1

பீன்ஸ் - 2

உருளைக் கிழங்கு - 1/2

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - தேவையான அளவு

பட்டை - 2

லவங்கம் - 4

சோம்பு - சிறிது

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சில இலைகள்

புதினா - சில இலைகள்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே உள்ள காய்கறி, பெரிய வெங்காயம் நம் விருப்பம் போல் நறுக்கி கொள்ளவும்.

தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், கறிவேப்பிலை, புதினா, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் மிளகாய் பொடி, தனியா பொடி, சாம்பார் பொடி சேர்த்து பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

உப்பு தேவையான அளவு சேர்க்கவும். அதில் அரைத்து வைத்து உள்ள தேங்காய் துருவல் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

விரும்பினால் இஞ்சி, பூண்டு கலவை சேர்க்கலாம்.