காய்கறி குருமா (3)
தேவையான பொருட்கள்:
பூண்டு - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3/4
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2 அல்லது 3
இஞ்சி -1/2 அங்குல துண்டு
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
வதக்க:
கேரட் - 1/2
காளி ஃபிளவர் - 1/2 கப்
பீன்ஸ் - 6
உருளை கிழங்கு - 1
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி
வதக்கி அரைக்க:
சிறிய வெங்காயம் - 5 அல்லது 6
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5
ஏலக்காய் - 2
முந்திரி - 10
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/2 கப்
கசகசா - 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை போட்டு 3/4 பாகம் வேகும் வரை வதக்கவும்.
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி அரைக்க வேண்டிய பொருள்களை வரிசையாக போட்டு வதக்கி, ஆற வைத்து இஞ்சி, கொத்தமல்லி தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
பெரிய வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வதக்கி அரைத்த விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்
தக்காளி,உப்பு போட்டு தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்
காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
தேங்காய், கசகசா விழுதை போட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் நறுக்கிய பூண்டு (3), சோம்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் (1) சேர்த்து வதக்கி, குழம்பில் கொட்டி மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
கரம் மசாலா, கொத்துமல்லி இலை சேர்த்து கலக்கி அடுப்பில் இருந்து குழம்பை இறக்கி பரிமாறவும்.