காய்கறி குருமா (1)
தேவையான பொருட்கள்:
உருளை - 25 கிராம்
கேரட் - 25 கிராம்
பீன்ஸ் - 25 கிராம்
கோபி - 25 கிராம்
பட்டாணி - - 25 கிராம்
மீல் மேக்கர் - 25 கிராம்
தக்காளி - 2
மசாலாவிற்கு:
நிலகடலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
பூடு - 6
வரமிளகாய் - 4
மிளகு - 4
பட்டை - 2
தனியா - 2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பூடு - 4 பல்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை ஓரளவுக்கு பொடியார் நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும்
மீல்மேக்கரை சுடுநீரில் 5 நிமிடம் வைத்து பின் பிழிந்து எடுத்து வைக்கவும்
மசலாவிற்கு கொடுத்துள்ளவற்றை வெறும் சட்டியில் வறுத்து நீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
பின் காய்கறிகளையும் மீல்மேக்கரையும் உப்பும் சேர்த்து பாதி பாகம் வேக விடவும்
பின் மசலாவை நீரில் கரைத்து அதில் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து கொதிக்க விடவும்
மசாலா வாசனை போனதும் இறக்கி பரிமாறவும்