காபூலி சன்னா குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறுப்பு கொண்டை கடலை - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்த்தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லி, புதினா தழைகள் - சிறிதளவு

கறிவேப்பிலை - ஒரு சிறிய கொத்து

எண்ணெய் - 50 மிலி

அரைத்துக் கொள்ள:

தேங்காய் துருவல் - 1/2 கப்

முந்திரி - 4

பட்டை - மிக சிறிய துண்டு

கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று

சோம்பு - 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

சன்னாவை 6 அல்லது 7 மணிநேரம் ஊறவைத்தல் வேண்டும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறிவைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதன் பின் தக்காளி,பச்சைமிளகாயையும், மல்லி புதினா, கறிவேப்பிலைகளையும் கழுவி சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

தக்காளி நன்கு மசிய வதங்கியதும்,மஞ்சள்த்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஊறிய சன்னாவை தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மிதமான தீயிலேயே ஐந்து நிமிடம் வதங்கவிடவும்.

அதற்க்குள் அரைக்க கொடுத்தவைகளை நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு வதங்கியவற்றில் அரைத்தவற்றை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து முதல் இருபது நிமிடம் வரை வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி, பரோட்டாவிற்க்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.