காடை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காடை - 3

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - 1 கொத்து

எண்ணெய் - 4 தேக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு, ஏலக்காய் - தலா 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காடையை சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கி ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.

அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டை விழுது போட்டு வதக்கி, அத்துடன் தயிர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து பிரட்டி விடவும்.

அதன் பிறகு நறுக்கின காடை துண்டங்களைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கறி நன்கு வெந்தவுடன் மேலே நறுக்கின கொத்தமல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: