கறுப்பு கொண்டைக்கடலை குருமா





தேவையான பொருட்கள்:
கறுப்பு கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
கறுவா - சிறு துண்டு
கிராம்பு - 3
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு:
கசகசா - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
செய்முறை:
கடலையை 7 - 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த கடலையை உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்த பொருள்களை விழுதாக அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும், கறுவா, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு பின்பு வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வேகவைத்த கடலையை தண்ணீருடன் சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்திக்கு மிகவும் நல்லது.