கடலைப்பருப்பு குருமா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

கடுகு - சிறிதளவு

உளுத்தம் பருப்பு - சிறிதளவு

பட்டை - ஒரு அங்குலம் அளவு

கிராம்பு - 4

கறிவேப்பிலை - 1 இணுக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை பாதி குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு பொரிந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை போடவும்.

பின்னர் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதன் பின் நறுக்கின தக்காளி சேர்த்து நன்கு வதங்கும் வரை வதக்கவும். தக்காளி வதங்கிய பின்னர் அதில் வேகவைத்த கடலை பருப்பை சேர்க்கவும்.

இதனுடன் சாம்பார்தூள், உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

சாம்பார் தூளின் வாசம் போகும் வரை வேகவைக்கவும்.

நன்கு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது. மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடியது.