கடலைப்பருப்பு குருமா





தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - ஒரு சிறிய டம்ளர்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் - 3 துண்டுகள்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 1
கசகசா - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். தேங்காயுடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்த்து கிளறிவிட்டு மிளகாய் தூள் சேர்க்கவும்.
பின் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேங்காய் விழுதைச் சேர்த்து கிளறிவிடவும்.
பின் குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்கேற்ற சுவையான, எளிமையான கடலைப்பருப்பு குருமா தயார்.