உருளை தக்காளி குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த உருளைகிழங்கு - 3

தக்காளி - 3

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி

எண்ணய் - 2 தேக்கரண்டி

உப்பு -தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்துறுவல் - 1/2 கப்

பொட்டுகடலை - 4 தேக்கரண்டி

இஞ்சி - சிறிதளவு

பட்டை - 1

கிராம்பு - 1

சோம்பு - 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 1

செய்முறை:

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கவும்.

பச்சைமிளகாயை இரண்டாக நறுக்கவும்.

உருளை கிழங்கை ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.

அரைக்க குடுத்தவற்றை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணய் ஊற்றி வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் அரைத்த விழுதை போட்டு மஞ்சள் பொடி, உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து மசித்த உருளைகிழங்கை போட்டு கலந்து கொதிக்கவிடவும்,

குருமா திக்கானவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: