உருளை சிவப்புக்கீரை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு - 1

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய சிவப்புக்கீரை - 1 கட்டு

தேங்காய் - 1/2 மூடி

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

குக்கரில் எண்ணைய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்.

அதனுடன் கீரை, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

பின் 1 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும்.

பின் தேங்காய், சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.

கொதிக்கும் கலவையில் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி ஒரு கலக்கு கலக்கி விடவும்.

குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கி குக்கரை திறந்து பரிமாறவும்.

குறிப்புகள்: