உருளை குருமா (1)
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - 2
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிமசால் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துறுவல் - 1/4 கப்
சோம்பு - 1/4 தேக்கரண்டி
முந்திரி - 5
பட்டை, கிராம்பு -2
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணை -2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளை கிழங்கை வேகவைத்து சிறிதாக நறுக்கிவைக்கவும்.
வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
தேங்காய்துறுவல்,சோம்பு,முந்திரி சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்,கறிமசால்தூள் சேர்த்து வதக்கி அரைத்த விழுது போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கிழங்கு சேர்க்கவும். தேவையான உப்பு போட்டு மூடிவைத்து கொதிக்கவிடவும்.
குருமா திக்கானதும் கொத்தமல்லிதூவி இறக்கி பரிமாறவும்.