உருளை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 2

சோள மாவு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பில்லை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சைமிளகாய் கீறி வைக்கவும்.

வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

கிழங்கு நன்றாக சேர்ந்து வெந்ததும் ஒரு தேக்கரண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து கிழங்குடன் சேர்க்கவும்.

இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி கிழங்கு மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான உருளைக்கிழங்கு குருமா