உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை குருமா
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
உருளை கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
புளி - 1 கோலிகுண்டு அளவு
பூண்டு -4 பல்
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வேக வைத்த கொண்டைக்கடலையுடன், உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும்.
5 நிமிடம் வைத்து இறக்கி பரிமாறவும்.