உருளைக்கிழங்கு குருமா (4)
தேவையான பொருட்கள்:
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
வட்டமாக அரிந்த சிறிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
எண்ணைய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 இனுக்கு
பட்டை - 1 அங்குலம்
கிராம்பு - 3
செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தளித்து பட்டை, கிராம்பு ,கறிவேப்பிலை போடவும்.
பின் வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
3 நிமிடத்திற்குப் பிறகு உப்பு ,உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி சேர்த்து மீதி உள்ள எண்ணையை சேர்க்கவும்.
பின் சீரகம், மிளகு, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்
அரைத்த கலவையை உருளை கிழங்கு கலவையில் ஊற்றி கொதிக்கவிடவும்.
7 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்.