உருளைக்கிழங்கு குருமா (3)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கை
அரைத்த இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
அரைத்த பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொரகொரப்பாக அரைக்கவும்:
வறுத்த தனியா - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
பட்டை- 1
கிராம்பு - 2
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த தக்காளி - 3/4 கப்
செய்முறை:
உருளைக்கிழங்குகளை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும்.
அது வெடித்ததும் வெங்காயத்தை அரிந்து கறிவேப்பிலையுடன் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதை மஞ்சள் தூளுடன் சேர்த்து வதக்கவும்.
அரைத்ததைச் சேர்த்து உப்பு, சிறிது தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.
உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.