உருளைக்கிழங்கு குருமா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 5 பல்

தக்காளி - 1

மஞ்சள்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - ஒரு கப்

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

சின்ன வெங்காயம் - 6

பூண்டு - 6 பல்

மல்லி தழை - கொஞ்சம்

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

தாளிக்க:

பட்டை - 3 துண்டு

கிராம்பு - 3

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பூண்டு, வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சிறு துண்டாகவும்,

உருளையை தோல் சீவி சிறு துண்டாகவும் நறுக்கி வைக்கவும்.

வாணலியில் அரைக்க கொடுத்த பொருட்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதில் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்.

மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த குருமா தக்காளி சாதம், சப்பாத்தி, பூரிக்கு பொருத்தமாக இருக்கும்.