உருளைக்கிழங்கு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நடுத்தர அளவு உருளைக் கிழங்கு - 2

நடுத்தர அளவு வெங்காயம் - 1

சிறிய அளவு தக்காளி - 2

மஞ்சள் தூள் - சிறிது

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/2 கப்

மிளகாய் வற்றல் - 3

தனியா - 1/2 மேசைக்கரண்டி

சோம்பு - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சோம்பு - 1/4 தேக்கரண்டி

பிரியாணி இலை - 1

செய்முறை:

உருளையை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவை அனைத்தையும் தேவையான நீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் உருளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து அரைத்த மசாலா, தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.

உருளை நன்றாக வெந்து குழைய துவங்கி, எண்ணெய் பிரிந்து மசாலா பதம் வந்ததும் கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: