ஈசி வெஜிடபிள் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய கேரட் - 1/2 கப்

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்

சிறிய பூக்களாக உதிர்த்த காலிஃப்ளவர் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 1/2 கப்

பொடியாக வெட்டிய பீட்ரூட் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3/4 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

பொடியாக நறுக்கிய மல்லிக்கீரை - 1 மேசைக்கரண்டி

தேங்காய் பால் - 1/4 கப்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 30 விநாடிகள் வதக்கி வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதியளவு வதங்கியதும்(கண்ணாடி போல் ஆனதும்) தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

எல்லா காய்கறிகளையும் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கி காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.

4 முதல் 5 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும்.

குக்கர் ஸ்டீம் அடங்கியதும் திறந்து குழிவான கரண்டியால் காய்கறிகளை லேசாக மசித்து விடவும். (முழுவதும் மசிக்க வேண்டாம்).

தேங்காய் பால் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு மல்லிக்கீரை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.