ஈசி மட்டன் குருமா
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
மீடியம் சைஸ் தக்காளி - 3
மீடியம் சைஸ் வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலம் - 1
தயிர் - குவியலாக 1 மேசைக்கரண்டி
தேங்காய் பவுடர் - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 6
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன், தயிர், பாதி இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு பிரட்டிக் கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளியை சேர்த்து தக்காளி மசியும்படி நன்கு கைகளால் பிசறி வைக்கவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் மீதமுள்ள வெங்காயம், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மட்டன் மசாலா கலவையை போட்டு பிரட்டி விடவும்.
ஒரு தட்டை வைத்து மூடி ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்கவும்.
விருப்பப்பட்டால் ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி போட்டு கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மூன்று அல்லது நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
குக்கரை திறந்து ஆவி அடங்கியதும் முந்திரியை அரைத்துக் கொண்டு அதனுடன் தேங்காய் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து மட்டன் குழம்பில் ஊற்றி தேங்காய் வாசனை அடங்கும் வரை தீயை மிதமாக வைத்து கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.